அமெரிக்க டென்னிஸ் பொதுவிருதுப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற ஜோக்கோவிச், மெட்வெடேவ்

AP
நோவாக் ஜோக்கோவிச்சும் (Novak Djokovic) டேனியல் மெட்வெடேவும் (Daniil Medvedev) அமெரிக்க டென்னிஸ் பொதுவிருதுப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.
போட்டி நாளை (10 செப்டம்பர்) நடைபெறவுள்ளது.
உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் மெட்வெடேவ், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸைத் (Carlos Alcaraz) 7-6(3) 6-1 3-6 6-3 எனும் ஆட்டக் கணக்கில் தோற்கடித்தார்.
செர்பியாவின் ஜோக்கோவிச் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஷெல்டனை(Shelton) 6-3 6-2 7-6 (7-4) எனும் ஆட்டக் கணக்கில் வென்றார்.
"ஜோக்கோவிச்சைத் தோற்கடிக்க வேண்டுமானால் நான் சிறப்பாக விளையாட வேண்டும்," என்று மெட்வெடேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"ஒவ்வொரு முறையும் பொதுவிருதுப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும்போது சரித்திரம் படைப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. எனது திறமை மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு," என ஜோக்கோவிச் கூறினார்.
போட்டியில் வெற்றிபெற்றால், 24ஆவது முறையாக Grand Slam பட்டத்தை வென்ற பெருமை ஜோக்கோவிச்சைச் சேரும்.