செனகல் தேசியக் காற்பந்து அணியில் 15 வயது இளம் வீரர்

(படம்: X / @Squawka)
செனகல் (Senegal) தேசியக் காற்பந்து அணியில் இணைந்துள்ள மிக இளவயது ஆட்டக்காரராக அமரா டியூவ் (Amara Diouf) திகழ்கின்றார்.
நேற்று (9 செப்டம்பர்) நடைபெற்ற ஆப்பிரிக்க நாடுகள் கிண்ணப் போட்டி 2023இன் தகுதிச் சுற்று ஆட்டத்தில் அவர் விளையாடினார்.
அவருக்கு வயது 15.
17 வயதுக்குக் குறைந்தோருக்கான ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான காற்பந்துப் போட்டியில் அதிகக் கோலடித்தவராக டியூவ் விளங்குகிறார். அந்த அணியில் டியூவ் 5 முறை கோலடித்து செனகலுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். அதன் பிறகு டியூவ் தேசிய அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
ருவாண்டாவுக்கு (Rwanda) எதிரான தகுதிச் சுற்று ஆட்டத்தில் 70ஆவது நிமிடத்தில் டியூவ் திடலுக்குள் நுழைந்தார். 81ஆவது நிமிடத்தில் கிட்டத்தட்ட கோல் போடவிருந்தார். ஆனால் டியூவ் அடித்தப் பந்தை ருவாண்டா கோல்காவலர் தடுத்து நிறுத்தினார்.
முதல் ஆட்டத்திலேயே டியூவ்வின் ஆட்டம் அபாரமாக இருந்ததாக ஆப்பிரிக்கக் காற்பந்துச் சம்மேளனம் புகழ்ந்துள்ளது.
ஆட்டம் 1-1 என்று சமநிலையில் முடிந்தது.
L குழுவிலுள்ள செனகல், 6 ஆட்டங்களில் இதுவரை 14 புள்ளிகள் எடுத்துள்ளது.
-Reuters