Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் அமெரிக்காவிற்குச் செல்ல டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சிற்குத் தடை

வாசிப்புநேரம் -
ஆண்களுக்கான டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) அமெரிக்காவில் நடைபெறவுள்ள மயாமி பொதுவிருது போட்டியில் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் அவருக்கு அமெரிக்காவினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

போட்டி ஏற்பாட்டாளர்கள் சிறப்பு அனுமதி பெற முயற்சி செய்தும் பயனில்லை.

கலிபோர்னியா மாநிலத்தில் நடந்துவரும் Masters 1000 போட்டியிலும் ஜோக்கோவிச்சால் கலந்துகொள்ள முடியவில்லை.

மயாமி பொதுவிருது போட்டியை அவர் 6 முறை வென்றிருக்கிறார்.

வரும் மே மாதம் நாட்டினுள் நுழைய COVID-19 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அமெரிக்க அதிகாரிகள் தளர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது ஜோக்கோவிச் அமெரிக்கப் பொதுவிருது போட்டியில் கலந்துகொள்ள வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்