Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

நான்காவது நாளாகத் தடுத்துவைக்கப்பட்ட டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்

டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovich) ஆஸ்திரேலியாவில் நான்காவது நாளாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) ஆஸ்திரேலியாவில் நான்காவது நாளாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

அவரது விசா விண்ணப்பத்தை ரத்து செய்யும் முடிவுக்கான விளக்கத்தை ஆஸ்திரேலியத் தரப்பு வழக்கறிஞர்கள் தயார் செய்துள்ளனர்.

ஆஸ்திரேலியப் பொதுவிருது டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள செர்பியாவிலிருந்து மெல்பர்ன் சென்ற ஜோக்கோவிச் அகதிகளைத் தங்கவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டார்.

அவரது விசா விண்ணப்பம் மறுக்கப்பட்ட முடிவுக்கு அவர் சட்ட ரீதியாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஜோக்கோவிச் தடுத்துவைக்கப்பட்டுள்ள அதே ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட செக் குடியரசு டென்னிஸ் வீரர் ரெனாட்டா வொராகோவாவின்(Renata Voracova) விசா விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டபிறகு அந்த முடிவை எதிர்க்காமல் ஆஸ்திரேலியாவை விட்டு அவர் சென்றதாக செக் குடியரசின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

ஜோக்கோவிச்சின் விவகாரம் திங்கட்கிழமை (10 ஜனவரி) விசாரணைக்கு வரவுள்ளது.

அவர் ஆஸ்திரேலியாவில் நுழைவதற்கான அனைத்து உத்தரவாதங்களையும் வழங்க செர்பிய அரசாங்கம் தயாராய் உள்ளதாக என்று அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்