Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சை விடுவிக்கக் கோரும் ஆதரவாளர்கள்

ஆஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சை விடுவிக்கக் கோரும் ஆதரவாளர்கள்

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சை விடுவிக்கக் கோரும் ஆதரவாளர்கள்

(படம்: AFP)

ஆஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள செர்பிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்சை (Novak Djokovic) விடுவிக்குமாறு அவரது ஆதரவாளர்களும் சக நாட்டவரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இருந்து மருத்துவ ரீதியாக விலக்கு அளிக்கப்பட்டதற்கான போதிய ஆதாரத்தை வழங்கத் தவறியதற்காக,ஜோக்கோவிச், மெல்பர்ன் நகருக்குச் சென்றபோது தடுத்துவைக்கப்பட்டார்.

அவரது விசாவையும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் ரத்துசெய்தனர்.

வரும் திங்கட்கிழமைவரை அவர் ஹோட்டலில் தடுத்துவைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அவரைத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்புவது குறித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் முடிவெடுக்கும்.

அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டாக வேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) கூறியிருக்கிறார்.

அண்மைச் சம்பவத்தால், ஆஸ்திரேலியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையில் அரசியல் ரீதியான சர்ச்சை எழலாம் என அஞ்சப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்