Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டென்னிஸ் விளையாட்டாளர் ஜோக்கோவிச் ஆஸ்திரேலியா செல்ல அனுமதி மறுப்பு

உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவாக் ஜோக்கோவிச்சின் (Novak Djokovic) விசா விண்ணப்பம் முறையாக இல்லாததால், அவர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
டென்னிஸ் விளையாட்டாளர் ஜோக்கோவிச் ஆஸ்திரேலியா செல்ல அனுமதி மறுப்பு

படம்: Paul CROCK AFP/File

டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவாக் ஜோக்கோவிச்சின் (Novak Djokovic) விசா விண்ணப்பம் முறையாக இல்லாததால் அவர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திரு. ஜோக்கோவிச் ஆஸ்திரேலியப் பொதுவிருதுப் போட்டியில் பங்கேற்க நேற்று மெல்பர்ன் நகருக்குச் சென்றிருந்தார்.

போட்டியில் பங்கேற்ற விளையாட்டாளர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா இதற்குமுன் தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு திரு. ஜோக்கோவிச் தடுப்பூசி போடுவதை எதிர்ப்பதாகக் கூறியிருந்தார்.

அதிலிருந்து மருத்துவ விலக்கு அளிக்கப்பட்டுப் போட்டியில் பங்கேற்ற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக முதலில் குறிப்பிடப்பட்டது.

மெல்பர்ன் நகரில் துல்லாமரீன் (Tullamarine) விமான நிலையத்தில் திரு. ஜோக்கோவிச்சின் விசா விண்ணப்பம் பற்றிப் பல மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இன்று அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து தாயகம் அனுப்பப்படுவார் என்றும் விசா விண்ணப்பம் மறுக்கப்பட்டது குறித்து அவரது வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பர் என்றும் கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்