Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பயிற்சியைத் தொடங்கினார் ஜோக்கோவிச்

பயிற்சியைத் தொடங்கினார் ஜோக்கோவிச்

வாசிப்புநேரம் -

டென்னிஸ் விளையாட்டாளர் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) தமது பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.

அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆஸ்திரேலியப் பொதுவிருது டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது.

தமது 21ஆவது பொதுவிருதை வெல்வதில் ஜோக்கோவிச் தீவிரமாக உள்ளார்.

ஆண்கள் பிரிவில் இதுவரை யாரும் 21ஆவது பொதுவிருதை வென்றதில்லை.

ஆஸ்திரேலியப் பொதுவிருதில் பங்கேற்க செர்பியாவிலிருந்து மெல்பர்ன் சென்ற ஜோக்கோவிச் அகதிகளுக்கான ஹோட்டலில் 4 நாள்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

COVID-19 தடுப்பூசி போடாத காரணத்தால் அவருக்கு விசா மறுக்கப்பட்டிருந்தது.

ஜோக்கோவிச்சுக்குச் சாதகமாக ஆஸ்திரேலிய நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து இப்போது பயிற்சியைத் தொடங்கியுள்ளார் ஜோக்கோவிச்.

- AFP/fh
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்