Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஜோக்கோவிச் விசா சர்ச்சை: விசாரணை திட்டமிட்டபடி நாளை நடைபெறும் - ஆஸ்திரேலிய நீதிமன்றம்

ஜோக்கோவிச் விசா சர்ச்சை: விசாரணை திட்டமிட்டபடி நாளை நடைபெறும் - ஆஸ்திரேலிய நீதிமன்றம்

வாசிப்புநேரம் -

டென்னிஸ் விளையாட்டில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவாக் ஜோக்கோவிச்சின் (Novak Djokovic) விசா குறித்த விசாரணை நாளை காலை திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விசாரணையை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

ஆனால் நீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது.

ஆஸ்திரேலியப் பொதுவிருது டென்னிஸ் போட்டியில் பங்கேற்க செர்பியாவிலிருந்து மெல்பர்ன் சென்ற ஜோக்கோவிச் அகதிகளுக்கான ஹோட்டல் ஒன்றில் நான்காம் நாளாகத் தடுத்துவைக்கப்பட்டார்.

COVID-19 தடுப்பூசி போடாத காரணத்தால் அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

ஜோக்கோவிச்சின் விசா சர்ச்சையை டென்னிஸ் ரசிகர்களும் செய்தியாளர்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்