Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சின் விசா அனுமதியை மீண்டும் ரத்து செய்தது ஆஸ்திரேலியா

வாசிப்புநேரம் -
டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சின் விசா அனுமதியை மீண்டும் ரத்து செய்தது ஆஸ்திரேலியா

படம்: AFP

ஆஸ்திரேலிய அரசாங்கம், டென்னிஸ் விளையாட்டாளர் நோவாக் ஜோக்கோவிச்சின் (Novak Djokovic) விசா அனுமதியை மீண்டும் ரத்து செய்துள்ளது.

COVID-19 நோய்க்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அவர், சமூகத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோக்கோவிச்சின் விசா அனுமதியில் பிழை இருந்ததால், கடந்த வாரம் ஆஸ்திரேலிய எல்லைக்காவல் அதிகாரிகள், விசாவை ரத்து செய்து அவரை ஹோட்டலில் தடுத்துவைத்தனர்.

பின்னர், அதன் தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் வெற்றிபெற்று விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், குடிநுழைவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் (Alex Hawke) தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜோக்கோவிச்சின் விசா அனுமதியை மீண்டும் ரத்து செய்ததாக அறிவித்தார். 

பொதுநலன் கருதி அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa