இந்திய இளையர்களை இன்னும் நெருக்கமாக்க உதவும் காற்பந்து
மக்கள் கழகத்தின் நற்பணிப் பேரவை இந்திய இளையர்களிடையே பிணைப்பை வலுப்படுத்த காற்பந்துப் போட்டியை நடத்தவிருக்கிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (1 டிசம்பர்) நடைபெறவிருக்கும் போட்டியில் சுமார் 250 இளையர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
காலஞ்சென்ற மூத்த துணையமைச்சர் பாலாஜி சதாசிவன் நினைவாக 12ஆவது முறையாகக் காற்பந்துப் போட்டி இடம்பெறவிருக்கிறது.
சிண்டாவுடன் இணைந்து நற்பணிப் பேரவை போட்டிக்கு ஏற்பாடு செய்கிறது.
விளையாட்டின்வழி இளையர்களை ஒன்றிணைக்கவும் அவர்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லவும் டாக்டர் பாலாஜி கொண்டிருந்த கனவைப் போட்டி பிரதிபலிக்கிறது.
இம்முறை இளையர்கள் மட்டுமல்லாமல் 35 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்துகொள்ளும் புதிய பிரிவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அது தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெண்களுக்கான பிரிவும் உண்டு.
வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு Kick Off! @ Kovanஇல் காற்பந்துப் போட்டியைப் பொதுமக்களும் பார்க்கச்செல்லலாம்.