Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

எல் சல்வடோரின் Alianza காற்பந்து அணிக்கு விளையாட்டரங்கைப் பயன்படுத்த ஓராண்டு தடை

வாசிப்புநேரம் -

Alianza FC அணிக்கு விளையாட்டரங்கத்தைப் பயன்படுத்த ஓராண்டு தடையும் 30,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருப்பதாகச் சல்வடோர் காற்பந்துச் சம்மேளனம் தெரிவித்தது.

அபராதத்தை ஜூலை 21ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இனி வரும் ஆட்டங்களை ரசிகர்கள் எவரும் பார்க்கமுடியாது என்றும் சம்மேளனம் கூறியது.

கடந்த சனிக்கிழமை (20 மே) அரங்கத்தில் ஆட்டம் நடைபெற்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

உள்ளூர்க் காற்பந்துப் போட்டியைக் காண ரசிகர்கள் கூட்டம் அரங்கத்தில் திரண்டபோது அங்குள்ள கதவு ஒன்று விழுந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அதன் காரணமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதற்குமுன்னர் கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் காற்பந்து அரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 135 பேர் மாண்டனர். அதற்குப் பிறகு நிகழ்ந்த மிகப் பெரிய அசம்பாவிதமாக எல் சல்வடோர் கூட்ட நெரிசல் கருதப்படுகிறது.

மத்திய அமெரிக்காவிலுள்ள ஆகப் பெரிய அரங்கங்களில் இதுவும் ஒன்று. அங்கு ஒரே நேரத்தில் 44,000க்கும் அதிகமான ரசிகர்கள் அமர்ந்து விளையாட்டைப் பார்க்கலாம்.

- Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்