உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி - ஈரானுடனான ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு அபார வெற்றி

Anne-Christine POUJOULAT / AFP
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் B பிரிவில் இங்கிலாந்து 6-2 எனும் கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியுள்ளது.
அதே பிரிவில், அமெரிக்காவுக்கும் வேல்ஸுக்கும் இடையே நடைபெற்ற இன்னோர் ஆட்டம், 1-1 எனும் கோல் எண்ணிக்கையில் சமநிலையில் முடிந்தது.
A பிரிவில், நெதர்லந்து 2-0 எனும் கோல் கணக்கில் செனகலை வெற்றிகண்டது.
'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம்.
சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup