Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சாதனை எண்ணிக்கையாக 302,000 பேரை ஈர்த்திருக்கும் F1 சிங்கப்பூர் Grand Prix

வாசிப்புநேரம் -
சாதனை எண்ணிக்கையாக 302,000 பேரை ஈர்த்திருக்கும் F1 சிங்கப்பூர் Grand Prix

(Photo by Lillian SUWANRUMPHA / AFP)

F1 சிங்கப்பூர் Grand Prix போட்டிகளைக் காணச் சாதனை எண்ணிக்கையாக 302,000 பேர் நுழைவுச் சீட்டுகளை வாங்கியுள்ளனர். 

போட்டி 2008ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கியதிலிருந்து இதுவரை இதுவே ஆக அதிக எண்ணிக்கை. 

நுழைவுச்சீட்டு வாங்கியோரில்....

உள்ளூர்வாசிகள் - 51%
வெளிநாட்டினர் - 49%

ஹோட்டல்களுக்கு....

ஹோட்டல்களின் வருவாய் இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்தது. 2018, 2019ஆம் ஆண்டுகளை விட இந்த ஆண்டு F1 பந்தயத் தடத்தைச் சுற்றியுள்ள ஹோட்டல்களில் ஓர் இரவு தங்குவதற்கான கட்டணம் கணிசமாக அதிகரித்தது. சராசரி அன்றாட அறைக் கட்டணம், ஓரிவுக்கு 440 வெள்ளியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் வர்த்தகங்களுக்கு.....

  • சிங்கப்பூரில் 2008ஆம் ஆண்டு Grand Prix போட்டிகள் தொடங்கியதிலிருந்து இதுவரை சுற்றுலாப் பயணிகள் செலவிட்ட தொகை ஒன்றரை பில்லியன் வெள்ளிக்கும் அதிகம். 
  • போட்டி தொடர்பான குத்தகைகளில் சுமார் 90 விழுக்காடு சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களுக்குச் சென்றன. 
  • பந்தயத் தடத்தைச் சுற்றியுள்ள உணவு-பானக் கடைகளும் இதர வர்த்தகங்களும் அனுகூலம் அடைந்துள்ளன. 
  • இதை ஒட்டி சிங்கப்பூரின் மற்ற இடங்களில் ஏற்பாடு செய்யப்படும் கேளிக்கை நிகழ்வுகள், விருந்துகளின் எண்ணிக்கையும்  அதிகரித்துள்ளது. 

உள்ளூர்வாசிகளுக்கு....

  • பந்தயத்தை ஒட்டி எல்லா வயதினருக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக நிகழ்வுகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
  • பந்தயத்துக்கான பணிகளில் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 1,000 மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

பயணத்துறைக்கு....

  • F1 கார்ப்பந்தயம் நடைபெறும் காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் சுமார் 25 MICE நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

(MICE - Meetings, Incentives, Conferences, Exhibitions  கூட்டங்கள், சலுகைகள், மாநாடுகள், கண்காட்சிகள்)

அவற்றில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை சுமார் 90,000.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்