F1 பந்தயத்துக்குத் திரும்பும் துருக்கியே
(கோப்புப் படம்: Lillian SUWANRUMPHA / AFP)
This audio is generated by an AI tool.
துருக்கியே F1 கார்ப்பந்தயத்துக்குத் திரும்புகிறது.
ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அடுத்த ஆண்டு துருக்கியேவில் F1 பந்தயம் நடைபெறும்.
அது இஸ்தான்புல் பார்க் (Istanbul Park) பந்தயத் தடத்தில் நடத்தப்படும்.
இம்முறை குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குப் பந்தயத்தை நடத்த துருக்கியே முடிவுசெய்துள்ளது.
அந்த அறிவிப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சியைத் துருக்கியே அதிபர் ரிசப் தாயிப் எர்துவான் (Recep Tayyip Erdogan) தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின்போது F1 கார் இஸ்தான்புல் வீதிகளைச் சுற்றிவந்தது.
இதற்கு முன்னர், 2005 முதல் 2011 வரை, பிறகு 2020இலிருந்து 2021ஆம் ஆண்டு வரை துருக்கியே F1 பந்தயத்தை ஏற்றுநடத்தியது. 2021ஆம் ஆண்டில் துருக்கியே F1 கார்ப்பந்தயத்திலிருந்துத் தற்காலிகமாக நீங்கியத்.
கோவிட்-19 பட்டியலில் அது சேர்க்கப்பட்டதே அதற்குக் காரணம்.
கோவிட்-19 கட்டுப்பாடுகள் அணிகளுக்குப் பயணச் சிக்கல்களை உருவாக்கின.
அதனால் துருக்கியேவை F1 பந்தயத்திலிருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.