Skip to main content
F1 கார்ப் பந்தயத் தூரம் குறைக்கப்படும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

F1 கார்ப் பந்தயத் தூரம் குறைக்கப்படும்

வாசிப்புநேரம் -
F1 கார்ப் பந்தயத் தூரம் குறைக்கப்படும்

(படம்: REUTERS/Stephanie Lecocq)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Formula One (F1) கார்ப் பந்தயங்களை நிர்வகிக்கும் ஆணையம், அடுத்த ஆண்டிலிருந்து Grand Prix கார்ப் பந்தய தூரத்தைக் குறைக்க இணங்கியுள்ளது.

புதிய 2027 எரிசக்தி கட்டமைப்பு விதிமுறைகளின் கீழ் எரிவாயு பயன்பாட்டைச் சுட்டிக்காட்டி ஆணையம் அந்த முடிவை எடுத்துள்ளது.

பந்தயத் தூரம் 305 கிலோமீட்டருக்குப் பதிலாக 290 கிலோமீட்டருக்குக் குறைக்கப்படும்.

இது இரண்டிலிருந்து மூன்று சுற்றுகள் குறைவு.

பந்தயத்தைத் தொடங்கியது முதல் முடிக்கும் வரை தற்போது விதிக்கப்பட்டுள்ள 3 மணி நேர அதிகபட்ச கால வரம்பும் நீக்கப்படவுள்ளது.

அந்த நேரக் கணக்கில் மழை போன்ற இடையூறுகள் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

ஆனால் உண்மையான கார்ப் பந்தயத்திற்கான 2 மணி நேர வரம்பு தொடர்ந்து நடப்பில் இருக்கும்.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்