Skip to main content
உலகக் கிண்ணக் காற்பந்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்து - ஆப்பிரிக்க ரசிகர்கள் US15,000 கட்ட வேண்டும்?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் புதிய விசா கொள்கை காற்பந்தையும் விட்டுவைக்கவில்லை.

வரும் ஜூன் 11ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதி வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் நடைபெறுகிறது உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி.

பல சோதனைகள் காத்திருக்கின்றன.

ஈரான் பங்கேற்றகுமா என்பது தெரியவில்லை. ஈரானியக் காற்பந்து வீரர்கள் எங்கே பயிற்சி செய்வார்கள் என்பதில் தெளிவில்லை.

போரை முடித்துக்கொண்டு காற்பந்துப் போட்டிக்கு அமெரிக்கா தயாராகிவிடும் என்றே ரசிகர்கள் நம்புகின்றனர்.

ஆப்பிரிக்காவில் 50 நாடுகள் உள்ளன. அவற்றில் அல்ஜீரியா, செனகல், துனிசியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன.

பல்லாயிரம் ஆப்பிரிக்க ரசிகர்கள் அமெரிக்காவுக்குச் செல்ல ஆவலோடு காத்திருப்பார்கள்.

ஆனால் ஒரு பெருஞ்சுவராக அவர்கள் முன்னால் நிற்கிறது புதிய விசா கொள்கை.

சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் செல்ல B-1 அல்லது B-2 விசா தேவை. அவர்கள் 5,000 முதல் 15,000 டாலர் வரை உத்தரவாத வைப்புத் தொகை செலுத்த வேண்டும். உள்ளே வருவதற்குமுன் கட்டப்படும் அந்தப் பணம் வெளியே போகும்போது திருப்பிக் கொடுக்கப்படும்.

வர்த்தகர்களுக்கு மட்டுமல்ல சாதாரணச் சுற்றுப்பயணிகளுக்கும் அது பொருந்தும்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எத்தனை ரசிகர்களால் அவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த முடியும் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

விளையாட்டுக்கான நுழைவுச் சீட்டு, ஓட்டல், உணவுச் செலவுகளோடு விசா செலவும் சேர்கிறது.

போர் முடிந்துவிடும் என்று காத்திருப்பதைப் போலவே விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டும் காத்திருக்க வேண்டும்.

என்ன நடக்கப் போகிறது என்பதைக் காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆதாரம் : Others/The Guardian

மேலும் செய்திகள் கட்டுரைகள்