Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரின் கடைசி அதிகாரத்துவ டென்னிஸ் ஆட்டம் இன்று இடம்பெறும்

வாசிப்புநேரம் -
உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரின் கடைசி அதிகாரத்துவ டென்னிஸ் ஆட்டம் இன்று இடம்பெறும்

(படம்: AFP/Glyn KIRK)

உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரர் (Roger Federer) இன்று லண்டனில் கடைசி முறையாகப் போட்டியில் ஆடவிருக்கிறார். 

நாற்பத்தொரு வயது ஃபெடரர் ஓய்வுபெறுவதாக அறிவித்துவிட்டார். 

இன்று Laver கிண்ணப் போட்டியில் அவர் ரஃபல் நடாலுடன் (Rafael Nadal) இரட்டையர் பிரிவில் சேர்ந்து ஆடவிருக்கிறார். 

அந்த மூன்று நாள் போட்டியில் ஆறு இணைகள் பொருதவிருக்கின்றன. ஃபெடரர், இன்று ஒருநாள் மட்டும் நடாலுடன் சேர்ந்து ஆடுவார். 

இருபது ஆண்டாக டென்னிஸ் உலகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இருவரும், ஒரே அணியில் சேர்ந்து ஆடும் இந்த அனுபவத்தை ஆவலோடு எதிர்பார்ப்பதாகக் கூறினர். 

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa