Skip to main content
FIFA 2034 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி சவுதி அரேபியாவில்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

FIFA 2034 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி சவுதி அரேபியாவில்

வாசிப்புநேரம் -
FIFA 2034 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி சவுதி அரேபியாவில்

(படம்: AP/Hassan Ammar)

2034ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.

2030ஆம் ஆண்டுப் போட்டியை மொரோக்கோ, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

2034ஆம் ஆண்டுப் போட்டியை நடத்த சவுதி அரேபியாவைத் தவிர்த்து வேறு எந்த நாடும் ஆர்வம் தெரிவிக்கவில்லை.

இது ஒரு பெருமைக்குரிய தினம் என்றும் உலகையே சவுதி அரேபியாவிற்கு அழைப்பதாகவும் அந்நாட்டு விளையாட்டு அமைச்சர் கூறினார்.

ஆனால் மனித உரிமை அமைப்புகள் அந்த முடிவுக்குக் கண்டனம் தெரிவித்தன.

போட்டியின் ஏற்பாட்டைச் சவுதி அரேபியாவிடம் கொடுப்பதால் கட்டுமான ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அவை கூறின.

LGBTQ சமூகத்தைச் சேர்ந்த ரசிகர்களின் பாதுகாப்பிற்கு சவுதி அரேபியா உறுதி அளித்திருப்பதாக இங்கிலாந்து காற்பந்து அமைப்பு குறிப்பிட்டது.

2022 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி கத்தாரில் நடைபெற்றது.

பன்னிரண்டு ஆண்டுக்குப் பிறகு மீண்டும் வளைகுடாவுக்குத் திரும்புகிறது உலகக் கிண்ணப் போட்டி.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்