Skip to main content
2026 உலகக் கிண்ணக் காற்பந்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் காற்பந்து - வெற்றி பெற்ற அணி கிண்ணத்தைத் தொட முடியாதா?

வாசிப்புநேரம் -
2026 உலகக் கிண்ணக் காற்பந்து - வெற்றி பெற்ற அணி கிண்ணத்தைத் தொட முடியாதா?
படம்: REUTERS/Jeenah Moon
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 07 Dec 2025 12:36PM புதுப்பிப்பு : 07 Dec 2025 01:18PM
அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபண்டினோ (Gianni Infantino) அர்ஜென்ட்டினா அணித் தலைமைப் பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனியிடம் (Lionel Scaloni) மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் (5 டிசம்பர்) 2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சந்திக்கும் அணிகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடந்தது.

அப்போது ஸ்கலோனி கையுறை அணிந்து வெற்றிக் கோப்பையைத் தொட வேண்டும் என்று கூறப்பட்டது.

அப்படிச் சொன்னது தவறு என்று இன்ஃபண்டினோ மன்னிப்புக் கேட்டார்.

அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா ஆகிய நாடுகளில் போட்டிகள் நடக்கும்.

உலகக் காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றி அணி அர்ஜென்டினா. அதன் பயிற்றுவிப்பாளரான ஸ்கலோனியை ஏற்பாட்டாளர்கள் அடையாளம் காணத் தவறினர்.

அது ஸ்கலோனிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

24 மணி நேரத்திற்குப் போட்டியின் தேதிகளை உறுதிசெய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது கோப்பையைத் தொடக் கூடாது என்று சொன்ன தவற்றைச் சரி செய்ய முனைந்தார் இன்ஃபண்டினோ.

கையுறையின்றி கிண்ணத்தைத் தூக்கும்படி ஸ்கலோனியை அவர் அழைத்தார்

உலகக் கிண்ண வெற்றியாளர்கள் கிண்ணத்தைத் தொட உரிமை உள்ளது என்றார் இன்ஃபண்டினோ.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்