Skip to main content
FIFA ஆசியான் கிண்ணம்: 6
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

FIFA ஆசியான் கிண்ணம்: 6-0 எனச் சிங்கப்பூர் தோல்வி

வாசிப்புநேரம் -
FIFA ஆசியான் கிண்ணம்: 6-0 எனச் சிங்கப்பூர் தோல்வி

(படம்: Football Association of Singapore)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 02 Oct 2026 09:21AM புதுப்பிப்பு : 02 Oct 2026 12:35PM
FIFA ஆசியான் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் தோல்வி அடைந்துள்ளது.

ஆட்டத்தில் சிங்கப்பூரும் மலேசியாவும் பொருதின.

மலேசியா 6-0 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

அதுவே சிங்கப்பூர் அணி அந்தப் போட்டியில் விளையாடிய இறுதி ஆட்டம்.

இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் போட்டி நடைபெற்றது.

ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் மலேசியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை.

இந்தோனேசியாவும் பங்களாதேஷும் பொருதிய ஆட்டத்தில் 9-2 எனும் கோல் கணக்கில் இந்தோனேசியா அபார வெற்றிபெற்றது.

கோல் கணக்கில் A பிரிவின் முதல் இடத்திற்கு இந்தோனேசியா சென்றது.

2ஆவது இடத்தில் மலேசியா.

வரும் திங்கட்கிழமை (5 அக்டோபர்) நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் இந்தோனேசியா தாய்லந்தைச் சந்திக்கும்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்