உலகக் கிண்ணக் காற்பந்து - 3ஆவது முறையாகத் தகுதிபெறத் தவறியது இத்தாலி
(படம்: Elvis BARUKCIC / AFP)
This audio is generated by an AI tool.
இத்தாலி தொடர்ந்து 3ஆவது முறையாக உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெறத் தவறியுள்ளது.
போஸ்னியாவுடன் பொருதிய தகுதிச் சுற்றில் அது தோல்வி அடைந்தது.
ஆட்டம் 1-1 எனச் சமநிலையில் முடிந்ததால் பெனால்டிக்குச் சென்றது.
பெனால்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் போஸ்னியா வென்றது.
இத்தாலி உலகக் கிண்ணத்தை 4 முறை வென்றிருக்கிறது.
ஆனால் 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் உலகக் கிண்ணப் போட்டிக்கு அது தகுதிபெறவில்லை.
கடைசியாக 2014ஆம் ஆண்டு இத்தாலி உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடியது; 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றது.
உலகக் கிண்ணப் போட்டி வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் போட்டியைச் சேர்ந்து நடத்துகின்றன.
பொதுவாக 32 அணிகள் இடம்பெறும். இம்முறை 48 அணிகள் களமிறங்கவுள்ளன.
போட்டிக்கான தகுதிச் சுற்றுகள் மும்முரமாக நடக்கின்றன.
போட்டிகள் ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 19ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.