Skip to main content
Etihad விளையாட்டரங்கில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

Etihad விளையாட்டரங்கில் தீ

வாசிப்புநேரம் -
Etihad விளையாட்டரங்கில் தீ

(படம்: Paul ELLIS / AFP)

Champions League போட்டி நடைபெறுவதற்கு முன்பு மென்செஸ்ட்டர் சிட்டியின் (Manchester City) Etihad விளையாட்டரங்கத்தில் தீ மூண்டது.

பொருள்களை விற்கும் பகுதி தீப்பிடித்தது.

Club Bruggeக்கு எதிரான முக்கிய போட்டிக்கு முன்பு அந்தச் சம்பவம் நேர்ந்தது.

மென்செஸ்ட்டர் சிட்டி அணியினர் அரங்கத்திற்குள் நுழையவிருந்த இடத்தின் அருகே 30 நிமிடத்துக்கு முன்னர் தீ மூண்டது.

அச்சமயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஆட்டத்துக்கு முந்திய நிகழ்ச்சியில் சிட்டியின் பெண் விளையாட்டாளர்கள் ஆடிக்கொண்டிருந்தனர்.

அதைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர்.

தீச்சம்பவத்தால் நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டது.

அந்த இடத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, தீ விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விளையாட்டரங்கம் மீண்டும் திறக்கப்பட்டு ரசிகர்கள் உள்ளே நுழையலாம் என்று அறிவிக்கப்பட்டது.

Champions League போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்