Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

கீழே விழுந்த ஜப்பான் முன்னாள் பயிற்றுவிப்பாளர்... தீவிரச் சிகிச்சைப் பிரிவில்...

வாசிப்புநேரம் -
கீழே விழுந்த ஜப்பான் முன்னாள் பயிற்றுவிப்பாளர்... தீவிரச் சிகிச்சைப் பிரிவில்...

(படம்: Facebook/Alberto Zaccheroni)

ஜப்பான், ஏசி மிலான் (AC Milan) காற்பந்துக் குழுக்களின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் அல்பெர்ட்டோ ஸக்கரோனி (Alberto Zaccheroni)மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸக்கரோனி, இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்ததாக Gazzetta dello Sport சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.

69 வயது ஸக்கரோனி 1998, 99ஆம் ஆண்டுகளில் ஏசி மிலான் காற்பந்துக் குழுவில் பயிற்றுவிப்பாளராகச் சேர்ந்து கிண்ணத்தை வென்றார்.

யுவென்ட்டஸ்(Juventus), லாஸியோ (Lazio), இன்ட்டர் மிலான் (Inter Milan) முதலிய Serie A காற்பந்துக் குழுக்களையும் அவர் நிர்வகித்துள்ளார்.

2010 முதல் 2014 வரை ஜப்பானியக் காற்பந்துக் குழுவில் பயிற்றுவிப்பாளராக இருந்தார் ஸக்கரோனி. 2011இல் ஜப்பான் ஆசியக் கிண்ணத்தை வெல்லவும் அவர் பங்காற்றியிருந்தார்.

- Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்