Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பிரெஞ்சு ஒலிம்பிக் குழுத் தலைவர்களுக்கு COVID-19... பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லமுடியாத நிலை

வாசிப்புநேரம் -

பிரெஞ்சு ஒலிம்பிக் நிர்வாகக் குழுவின் தலைவருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

அதன் காரணமாக பிரிகிட் ஓன்ரிக்கேஸ் (Brigitte Henriques) சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் இடம்பெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என பிரெஞ்சுக் குழு தெரிவித்துள்ளது. 

பிரெஞ்சுப் போட்டிக் குழுவின் தலைவரான நத்தலி பெஷாலட்டுக்கும் (Nathalie Pechalat) நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரும் பெய்ச்சிங்குக்குச் செல்லமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. 

பிரான்ஸிலிருந்து பெய்ச்சிங் செல்லவுள்ள போட்டியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் அவர்கள் இருவரும் "தூரத்திலிருந்து" ஆதரவு வழங்கவிருப்பதாகவும் பிரெஞ்சு ஒலிம்பிக் நிர்வாகக் குழு குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்