Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

Champions League - காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மென்செஸ்ட்டர் சிட்டி; 5 கோல்கள் போட்டு எர்லிங் ஹாலன்ட் சாதனை

வாசிப்புநேரம் -
Champions League - காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மென்செஸ்ட்டர் சிட்டி; 5 கோல்கள் போட்டு எர்லிங் ஹாலன்ட் சாதனை

(படம்: Reuters/Carl Recine)

ஒரே Champions League ஆட்டத்தில் 5 கோல்களைப் போட்ட சாதனையை மென்செஸ்ட்டர் சிட்டி விளையாட்டாளர் எர்லிங் ஹாலன்ட் (Erling Haaland) ஈடு செய்துள்ளார். 

RB Leipzig அணியுடன் பொருதிய இரண்டாம் சுற்றின் இரண்டாம் கட்ட ஆட்டத்தில் அவர் அந்தச் சாதனையைப் புரிந்தார்.

அவருடைய 5 கோல்களையும் சேர்த்து 7க்குப் பூஜ்யம் என்ற கோல் எண்ணிக்கையில் மென்செஸ்ட்டர் சிட்டி வெற்றி பெற்றது.

8க்கு 1 என்ற ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கையில் அது காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றது.

இண்டர் மிலான் அணியும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இன்றிரவு நடைபெறவிருக்கும் 2 ஆட்டங்களில் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும் கடைசி 2 குழுக்கள் தெரிவுசெய்யப்படும்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்