ஹாரி கேனுக்கு Ballon d'Or விருது
(படம்: FRANCK FIFE / AFP)
This audio is generated by an AI tool.
இந்த ஆண்டின் ஆகச்சிறந்த காற்பந்து வீரருக்கான Ballon d'Or விருதை இங்கிலாந்தின் ஹாரி கேன் (Harry Kane) முதல்முறையாக வென்றுள்ளார்.
33 வயது கேன் பாயெர்ன் மியூனிக் (Bayern Munich) அணியைச் சேர்ந்தவர்.
சென்ற பருவத்தில் 65 ஆட்டங்களில் 73 கோல்கள் அடித்து அசத்தியிருக்கிறார்.
உலகக் கிண்ணத்தில் 6 முறை கோல் புகுத்தி இங்கிலாந்தை 3ஆவது நிலைக்கு அழைத்துச் சென்றார்.
ஸ்பெயினின் லமீன் யமால் (Lamine Yamal), பிரான்ஸின் கிலியான் எம்பாப்பே (Kylian Mbappe) ஆகிய இருவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு கேன் விருதை வென்றுள்ளார்.
25 ஆண்டுகள் கழித்து அந்த விருது மீண்டும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்டக்காரருக்குச் சென்றுள்ளது.
கடைசியாக 2001ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மைக்கல் ஓவன் (Michael Owen) அந்த விருதை வென்றார்.
விருது நிகழ்ச்சி முதல்முறையாக லண்டன் நகரில் நடைபெற்றது.
நாட்டைப் பிரதிநிதிப்பதில் பெருமை தெரிவித்த கேன், லண்டனில் விருதைப் பெற்றதில் இன்னும் மகிழ்ச்சி என்று சொன்னார்.
பெண்களுக்கான Ballon d'Or விருதை ஸ்பெயினின் அலெக்ஸியா புட்டெல்லாஸ் (Alexia Putellas) வென்றார். அவர் இந்த விருதைப் பெறுவது மூன்றாவது முறை.
மூன்று முறை அந்த விருதை வென்றுள்ள முதல் பெண் அவர்.