Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

'முட்டாள்கள்' என்று சொன்னதற்கு அமைச்சர் டேவிட் நியோ மன்னிப்புக் கேட்டார்: ஹாங்காங்

வாசிப்புநேரம் -
'முட்டாள்கள்' என்று சொன்னதற்கு அமைச்சர் டேவிட் நியோ மன்னிப்புக் கேட்டார்: ஹாங்காங்
(படம்: Facebook/David Neo)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ (David Neo), தகாத வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக ஹாங்காங் தெரிவித்துள்ளது.

திரு நியோ ஹாங்காங் காற்பந்து விளையாட்டாளர்களையும் ரசிகர்களையும் "முட்டாள்கள்" என்று அவமரியாதையாகச் சொல்லியிருந்தார்.

அண்மையில் ஹாங்காங்கில் ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று நடந்தது. அதில் சிங்கப்பூரும் ஹாங்காங்கும் பொருதின.

ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது. 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

ஆட்டம் முடிந்த பின் உடைமாற்று அறையில் திரு நியோ குழுவினரைப் பாராட்டியபோது இந்த வார்த்தைகளைச் சொன்னார்.

அந்தக் காணொளி சமூக ஊடகத்தில் பரவியது.

திரு நியோ மின்னஞ்சல் வழி மன்னிப்புக் கேட்டதாக ஹாங்காங் கலாசார, விளையாட்டு, சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

சம்பவத்தால் ஹாங்காங்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விளையாட்டு, கலாசார ரீதியான உறவு பாதிக்கப்படாது என்றும் அவர் சொன்னார்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்