Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

"பெரிய அளவில் பின்தங்கியிருக்கிறோம்!" - இந்தியத் தேசியக் காற்பந்துக் குழுப் பயிற்றுவிப்பாளர் அதிருப்தி

வாசிப்புநேரம் -

இந்தியாவின் தேசியக் காற்பந்தாட்டக் குழுவின் பயிற்றுவிப்பாளர் குழுவின் முன்னேற்றம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

திரு இகோர் ஸ்டிமாக் (Igor Stimac) 2019ஆம் ஆண்டில் இந்தியக் குழுவில் பயிற்றுவிப்பாளராகச் சேர்ந்தார். 

வெஸ்ட் ஹாம், டார்பி (West Ham, Derby) ஆகிய குழுக்களில் இங்கிலிஷ் பிரீமியர் லீகில் காற்பந்தாட்ட விளையாட்டாளராக இருந்திருக்கிறார் 54 வயதுத் திரு ஸ்டிமாக்.

ஆசிய நாடுகளில் தலைசிறந்த 8 குழுக்களுடன் இந்தியத் தேசியக் குழுவை ஒப்பிடும் அவர் இந்தியா சுமார் 10 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகக் கருதுகிறார். 

திரு ஸ்டிமாக் கேட்டதைவிடக் குறைவான சம்பளத்துக்கே இந்தியக் குழுவின் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றுகிறார். அதனால் இவ்வாண்டு செப்டம்பரில் முடிவுபெறவுள்ள ஒப்பந்தத்தை நீட்டிக்க அவர் விடுத்துள்ள நிபந்தனைகள் நிறைவேறப்படவேண்டும் என்றார் அவர். 

இந்தியக் குழு முன்னேறவேண்டுமென்றால் இந்திய லீகில் பங்கேற்கும் வெளிநாட்டு விளையாட்டாளர்களை ஒட்டுமொத்தமாக அகற்றவேண்டும் என்ற பரிந்துரையை அவர் முன்வைத்தார். 

இந்தியக் காற்பந்துத் துறையில் பலவற்றை மாற்றியமைக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa