Skip to main content
இந்திய ஹாக்கியின் நிறம் நீலம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

இந்திய ஹாக்கியின் நிறம் நீலம்

வாசிப்புநேரம் -
இந்திய ஹாக்கியின் நிறம் நீலம்

படம்: AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கோப்பையில் ஆரஞ்சு நிறச் சீருடை சர்ச்சையை ஏற்படுத்தியதால் இந்திய ஹாக்கி அணிகள் மீண்டும் நீலச் சீருடைக்கு மாறுகின்றன.

நாகோயா-ஐச்சியில் (Nagoya-Aichi) செப்டம்பர் 19 தொடங்கும் ஆசிய விளையாட்டுகளில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்.

ஆடவர், மகளிர் அணிகள் இரண்டும் நீலத்தை முதன்மை நிறமாக அணியும்.

உலகக் கோப்பையில் பயன்படுத்தப்பட்ட ஆரஞ்சு நிறத்திற்கு ஹாக்கி இந்தியா நிர்வாகிகளும் முன்னாள் வீரர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அந்த நிறமாற்றம் குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்று ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கே கூறியிருந்தார்.

“மீண்டும் நீல நிறத்திற்கு மாறுகிறோம். இரு அணிகளும் ஆசிய விளையாட்டுகளில் நீலச் சீருடை அணியும்,” என்றார் திரு திர்கே.

ஆரஞ்சு இரண்டாவது நிறமாக இருக்கும் என்றார் அவர்.

இந்திய ஆடவர் அணி ஆசிய விளையாட்டுத் தங்கத்தைத் தக்கவைக்க களமிறங்குகிறது.

தங்கம் வென்றால் 2028 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறும்.

மகளிர் அணி கடந்த ஆசிய விளையாட்டுகளில் வெண்கலப் பதக்கம் வென்றது.

இம்முறை அதைவிடச் சிறந்த முடிவை அது எதிர்பார்க்கிறது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்