Skip to main content
உலகக் கிண்ணம் 2026: இதுவரை 500 மில்லியன் விண்ணப்பங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

உலகக் கிண்ணம் 2026: இதுவரை 500 மில்லியன் விண்ணப்பங்கள்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் நுழைவுச் சீட்டு விண்ணப்பங்கள் சாதனை அளவை எட்டியுள்ளன.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ இம்முறை போட்டியை இணைந்து நடத்துகின்றன.

நுழைவுச்சீட்டுகளைப் பெற இதுவரை 500 மில்லியன் விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன.

முந்தைய 2 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை விட அது பத்து மடங்கு அதிகம் என FIFA தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில்
ஈரான் பங்கேற்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) ஒப்புதல் அளித்துள்ளார்.

ஈரான் போட்டிகளில் பங்கேற்கும் என்றும், அமெரிக்காவில் போட்டிகளில் விளையாடும் என்றும் இதற்கு முன் FIFA தலைவர் ஜியானி இன்ஃபண்டினோ (Gianni Infantino)தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வான்கூவரில் நடைபெற்ற FIFA கூட்டத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈரான் அணியைத் தடைசெய்யும்படி கோரிக்கை விடுத்தனர்.

அணி, ஈரான் மக்களுக்குப் பதிலாக இஸ்லாமியப் புரட்சிப்டையைப் பிரதிநிதிப்பதாக அவர்கள் கூறினர்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்