Skip to main content
உலகக் கிண்ணக் காற்பந்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்து - மெக்சிகோவில் ஆடலாமா என்று கேட்கிறது ஈரான்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஈரானின் முதல் சுற்று ஆட்டங்களை மெக்சிகோவிற்கு மாற்ற அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்துடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தற்போது ஈரான் கலந்துகொள்ளும் ஆட்டங்கள் அமெரிக்காவில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

நியூஸிலந்து, பெல்ஜியம் ஆகிய இரு நாடுகளுடன் ஈரான் பொருதும் ஆட்டம் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெறும்.

ஈரானும் எகிப்தும் போட்டியிடும் ஆட்டம் சியாட்டல் நகரில் நடக்கும்.

ஈரானியக் காற்பந்து அணி பயிற்சி செய்வதற்கு அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் ஈரானிய அணிக்கு விசா வழங்குவதிலும் ஆதரவு அளிப்பதிலும் ஒத்துழைக்கத் தவறியதாக மெக்சிகோவிற்கான ஈரானியத் தூதர் தெரிவித்தார்.

வரும் ஜூன் மாதம் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகள் சேர்ந்து நடத்தவுள்ளன.

சென்ற மாதம் (பிப்ரவரி) அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் தொடுத்ததை அடுத்து போட்டியில் ஈரானியக் காற்பந்து அணியின் பங்கேற்பு கேள்விக்குறியானது.

ஈரானியக் காற்பந்து அணி அமெரிக்காவிற்கு வரவேற்கப்படும்; ஆனால் அவர்களின் பாதுகாப்பைம் உயிரையும் கருதி அவர்கள் வரக்கூடாது என்று அமெரிக்க அதிபர் டோனலட் டிரம்ப் (Donald Trump) கூறுகிறார்.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்