Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணப் போட்டி - தொடக்க ஆட்டத்தில் கிடைத்த வெற்றி நிலைக்கவில்லை... ஜப்பான் ஏமாற்றம்

வாசிப்புநேரம் -

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் கோஸ்ட்டா ரிக்காவுக்கு (Costa Rica) எதிரான ஆட்டத்தில் ஜப்பான் தோல்வி கண்டது.

ஜப்பான் அதன் தொடக்க ஆட்டத்தில் 4 முறை உலகக் கிண்ணத்தை வென்ற ஜெர்மனியை வென்றதை அடுத்து இது பெரும் ஏமாற்றமாக உள்ளது.

1-0 எனும் கோல் கணக்கில்  கோஸ்ட்டா ரிக்கா வெற்றி கண்டது. 

கூடுதலாக 6 நிமிடங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

ஜப்பானுக்கும் கோஸ்ட்டா ரிக்காவுக்கும் இடையிலான ஆட்டத்தின் முதற்பாதியில் இருதரப்புக்கும் கோல் ஏதும் இல்லை.

பின்னர் 81ஆவது நிமிடத்தில் கோஸ்ட்டா ரிக்கா முதல் கோலை அடித்தது.

அதன் விளைவாக E குழுப் பட்டியலில் 
முதலிடத்தில் ஸ்பெயின் உள்ளது.

இரண்டாவது இடத்தில் ஜப்பான் உள்ளது.

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்