Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காமன்வெல்த் போட்டிகளில் சைக்கிளோட்டத்தில் விபத்து

வாசிப்புநேரம் -
காமன்வெல்த் போட்டிகளில் சைக்கிளோட்டத்தில் விபத்து

(Photo: AFP/ADRIAN DENNIS)

காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெற்ற ஒரு விபத்தில் இங்கிலாந்து சைக்கிளோட்ட வீரர் மேட் வால்ஸ் (Matt Walls) உள்ளிட்ட சிலர் காயம் அடைந்திருக்கின்றனர்.

லண்டன் அரங்கில் ஒலிம்பிக் வீரரான வால்ஸ் ஓட்டிச் சென்ற சைக்கிள், பாதுகாப்புச் சுவரைத் தாண்டி கூட்டத்துக்குள் புகுந்தது.

நாற்பது நிமிடத்துக்கு மேல் சிகிச்சை தரப்பட்டபின் அவர் மருத்துவ உதவி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டார்.

வாகனத்தில் ஏற்றும்போது அவர் விழிப்புடன் இருந்ததாகவும், பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த 15 கிலோமீட்டர் தூர தகுதிச் சுற்றுப் போட்டியில், முன்னால் சென்று கொண்டிருந்த நியூசிலந்து, ஆஸ்திரேலிய சைக்கிளோட்டிகள் இடறிவிழுந்தபோது அவர்களைத் தவிர்ப்பதற்காக இங்கிலாந்து சைக்கிளோட்ட வீரர் சுவரைத் தாண்ட நேர்ந்தது.

கூட்டத்தில் இருந்த ஆடவர் ஒருவரும், ஒரு சிறுமியும் சாதாரண காயங்களோடு தப்பினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்