கோல்ஃப் விளையாட்டில் சாதனை படைத்த அமெரிக்காவின் கேத்தி வித்வோர்த் மரணம்...
கோல்ஃப் விளையாட்டில் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை கேத்தி வித்வோர்த் (Kathy Whitworth) காலமானார்.
உற்றார் உறவினர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொண்டிருந்த 83 வயது கேத்தி நேற்று முன்தினம் (24 டிசம்பர்)காலமானார்.
1981ஆம் ஆண்டில் LPGA Tour கோல்ஃப் போட்டியில் 1 மில்லியன் டாலர் சம்பாத்தித்த முதல் பெண்மணி எனும் பெருமை அவரைச் சேரும்.
வித்வோர்த் 6 முக்கியப் போட்டிகளில் வென்று கோல்ஃப் விளையாட்டில் முத்திரை பதித்தவர்.
அவருடைய மறைவுக்குச் சமூகத் தளங்களில் இரங்கல் குறிப்புகள் குவிகின்றன.