Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

PSGக்கு 201ஆவது கோல்... சாதனைபடைத்த கிலியான் எம்பாப்பே

வாசிப்புநேரம் -
PSGக்கு 201ஆவது கோல்... சாதனைபடைத்த கிலியான் எம்பாப்பே

(படம்: FRANCK FIFE / AFP)

PSG காற்பந்துக் குழுவில் அதிகக் கோலடித்த ஆட்டக்காரராக கிலியான் எம்பாப்பே சாதனை படைத்துள்ளார்.

குழுவில் அவர் தமது 201ஆவது கோலைப் புகுத்தினார். நோட் (Nantes) குழுவுக்கு எதிரான பிரெஞ்சு லீக் 1 ஆட்டத்தில் எம்பாப்பே அந்தக் கோலை அடித்தார்.

அந்த ஆட்டத்தில் PSG 4-2 என்ற கோல்கணக்கில் வென்றது.

ஆட்டம் முடிந்ததும் 24 வயது எம்பாப்பேயின் சாதனையைக் கௌரவிக்க அவருக்குக் கிண்ணம் வழங்கப்பட்டது.

கடந்த வாரம்தான் எம்பாப்பே எடின்சன் கவானியின் (Edinson Cavani) 200 கோல் சாதனையைச் சமன் செய்தார்.

2017ஆம் ஆண்டு 18 வயதில் மொனாக்கோவிலிருந்து வந்த எம்பாப்பே இதுவரை 247 முறை ஆட்டங்களில் களமிறங்கியுள்ளார்.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்