Skip to main content
19 வயதில் பார்சலோனா அணித்தலைவர்... யமால் புதிய சாதனை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

19 வயதில் பார்சலோனா அணித்தலைவர்... யமால் புதிய சாதனை

வாசிப்புநேரம் -
19 வயதில் பார்சலோனா அணித்தலைவர்... யமால் புதிய சாதனை

படம்: Reuters/Albert Gea

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பார்சலோனா (Barcelona) அணியின் ஆக இளம் அணித்தலைவர் என்ற சாதனையை லமின் யமால் (Lamine Yamal) படைத்துள்ளார்.

19 வயது 58 நாள்களில் அவர் அந்தச் சாதனையைப் படைத்தார்.

புதன்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பார்சலோனா, ஃபெயனூர்ட் (Feyenoord) அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் முதன்மை அணித்தலைவர் ரஃபின்யா (Raphinha) மாற்றப்பட்டார்.

அப்போது அவர் அணித்தலைவருக்கான கைப்பட்டையை யமாலிடம் வழங்கினார்.

இதற்கு முன்பு போஜன் கிர்கிச் (Bojan Krkic) பார்சலோனாவின் ஆக இளம் அணித்தலைவராக இருந்தார்.

2010ஆம் ஆண்டு கோப்பா டெல் ரே (Copa del Rey) ஆட்டத்தில் அவர் அணியை வழிநடத்தினார்.

அப்போது அவருக்கு 20 வயது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்