Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

லிவர்பூல் அணியில் இதுவே எனது கடைசிப் பருவம்: சாலா

வாசிப்புநேரம் -
லிவர்பூல் அணியில் இதுவே கடைசிக் காற்பந்துப் பருவம் என அணியின் ஆட்டக்காரர் முகமது சாலா (Mohamed Salah) தெரிவித்துள்ளார்.

லிவர்பூலும் மென்சஸ்டர் யுனைட்டடும் பொருதிய ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.

லூயிஸ் டயாஸ் (Luis Diaz) இரு கோல்களையும் சாலா ஒரு கோலையும் புகுத்தி லிவர்பூல் அணியை வெற்றியடையச் செய்தனர்.

ஆட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய 32 வயது சாலா, இதுவே அணியுடனான தமது கடைசி ஆண்டு என்றார். அதை மகிழ்ச்சியாய் அனுபவிக்கப்போவதாக அவர் கூறினார்.

இதுவரை லிவர்பூல் அணி தம்மிடம் ஒப்பந்தம் பற்றிப் பேசவில்லை என்றும் அவர் சொன்னார்.

2022ஆம் ஆண்டு சாலா லிவர்பூல் அணியுடன் 3 ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டார்.

அப்போது ஆண்டுக்கு 24 மில்லியன் டாலர் சம்பளம் பெற்றார். அதன் மூலம் அணியின் வரலாற்றில் ஆக அதிகச் சம்பளம் வாங்கும் ஆட்டக்காரர் என்ற பெருமையை அவர் எட்டினார்.

அவர் சவுதி அரேபிய அணிக்கு மாறலாம் என்று நம்பப்படுகிறது.

சென்ற ஆண்டு சவுதியின் அல்-இத்திஹாட் (Al-Ittihad) அணி சாலாவைப் பெற 150 மில்லியன் பவுண்ட் வழங்க முன்வந்தது.

ஆனால் லிவர்பூல் அதை நிராகரித்தது.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்