Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

F1 சிங்கப்பூர் கார்ப்பந்தயத்தில் லூயிஸ் ஹேமில்டன் மூக்குத்தி அணிய அனுமதி

வாசிப்புநேரம் -

F1 சிங்கப்பூர் கார்ப்பந்தயத்தின்போது லூயிஸ் ஹேமில்டன் (Lewis Hamilton) மூக்குத்தி அணிந்திருக்க மருத்துவ காரணங்களுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பிரிட்டனைச் சேர்ந்த ஹேமில்டன் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி அனைத்து நகைகளையும் அகற்றிவிட்டதாக Mercedes குழு படிவத்தைச் சமர்ப்பித்ததற்காக அதற்கு 24,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அண்மைப் பந்தயங்களில் ஹேமில்டன் போட்டிக்கு முன்பு அனைத்து நகைகளையும் அகற்றிவிட்டார்.

அதே போல் அவர் இந்தப் பந்தயத்திற்கும் செய்துவிடுவார் என்று Mercedes குழு எண்ணியதாக F1 கார்ப்பந்தயங்களுக்கான தலைமை நிர்வாகம் FIA தெரிவித்தது.

குழு ஹேமில்டனிடம் கேட்கவில்லை என்றும் அது கூறியது.

அந்தத் தவறு வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்பதால் குழுவிற்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அது சொன்னது.

மூக்குத்தியை அகற்றியபோது தொற்று ஏற்பட்டதால் அதைக் கழற்ற வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியதாக ஹேமில்டன் தெரிவித்தார்.

அதனால் அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

கார் ஓட்டுநர்கள் பந்தயத்தின்போது எந்த நகையும் அணியக்கூடாது என்ற விதிமுறை பல ஆண்டுகளாக நடப்பில் உள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்