Skip to main content
மெஸ்ஸி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

மெஸ்ஸி - அர்ஜென்ட்டினாவின் 'நம்பிக்கை நாயகன்'

வாசிப்புநேரம் -
மெஸ்ஸி - அர்ஜென்ட்டினாவின் 'நம்பிக்கை நாயகன்'

(கோப்புப் படம்: Pedro UGARTE / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) அனைத்துலகக் காற்பந்து ஆட்டங்களிலிருந்து ஓய்வுபெறுகிறார்.

உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டி நிறைவுபெற்ற ஆறு வாரங்களில் அவர் அதனை அறிவித்துள்ளார்.

அர்ஜென்ட்டின தேசிய அணி சார்பாக மெஸ்ஸி 207 ஆட்டங்களில் களமிறங்கினார்.

அவற்றில் அவர் மொத்தம் 125 கோல்களைத் தந்தார்.

மெஸ்ஸி அர்ஜென்டினாவின் நம்பிக்கை நாயகனாக மாறியது எப்படி?

18 வயதில் மெஸ்ஸி தமது முதல் அனைத்துலகப் போட்டியில் விளையாடினார்.

அந்த ஆட்டத்தில் மெஸ்ஸி அர்ஜென்ட்டின அணியின் மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கினார்.

மெஸ்ஸியின் முழங்கை எதிரணி வீரர்மீது பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

களமிறங்கிய 90 விநாடிகளில் மெஸ்ஸி சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார்.

முதல் ஆட்டத்தில் தடுமாற்றம் என்றாலும் நாளடைவில் அவர் புகழ் ஓங்கியது.

2006ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் முதல் முறையாக விளையாடினார்.

2014ஆம் ஆண்டு மெஸ்ஸி அர்ஜென்ட்டினாவுக்காக விளையாடினார்.

சுமார் 25 ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக அர்ஜென்டினா உலகக்கிண்ண இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றது.

ஆனால் அது ஜெர்மனிக்கு எதிராக வெற்றியை நழுவவிட்டது.

2022 உலகக் கிண்ணத்தில் மெஸ்ஸி தலைமையில் அர்ஜென்டினா பிரான்ஸை வீழ்த்தி வாகை சூடியது.

இந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியிலும் அர்ஜென்டினா இறுதிச்சுற்று வரை சென்றது.

மெஸ்ஸி வழிநடத்திய அர்ஜென்டினா அணி இரண்டு முறை கோப்பா அமெரிக்கா கிண்ணத்தைத் தட்டிச்சென்றுள்ளது.

மெஸ்ஸி ஓய்வு பெற்றாலும் அவரது புகழ் நிலைத்திருக்கும் என்று உலகெங்கும் உள்ள காற்பந்து ரசிகர்கள் வாழ்த்துகின்றனர்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்