Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பொன்னில் மின்னும் iPhoneகளைப் பரிசாகக் கொடுத்த லயனல் மெஸ்ஸி

வாசிப்புநேரம் -
இந்த வாரத் தொடக்கத்தில் FIFAஇன் மிகச் சிறந்த காற்பந்து ஆட்டக்காரருக்கான விருதை வென்ற அர்ஜென்ட்டினா நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) தமது காற்பந்துக் குழுவுக்கும் பணியாளர்களுக்கும் பரிசளித்துள்ளார்.

அவர் கொடுத்தது 14 Pros iPhoneகள்.

அவை 24 கேரட் சுத்தமான தங்கம் கொண்டு உருவாக்கப்பட்டவை.

அதனை iDesign Gold நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெஞ்சமின் லியோன்ஸ் (Benjamin Lyons) வடிவமைத்ததாக The Sun செய்தி கூறுகிறது.

அண்மை உலகக் கிண்ணக் காற்பந்து இறுதியாட்டம் முடிந்ததும் மெஸ்ஸி தங்களைத் தொடர்புகொண்டதாக நிறுவனம் கூறியது.
 
(படம்: Instagram/idesigngold)
ஒவ்வொரு திறன்பேசிகளிலும் சம்பந்தப்பட்ட ஆட்டக்காரரின் பெயர், அவரது ஆட்ட எண், அர்ஜென்ட்டினா தேசியக் காற்பந்து அணியின் சின்னம் முதலியவற்றுடன் "உலகக் கிண்ண வெற்றியாளர்" என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 35 திறன்பேசிகளை மெஸ்ஸி பரிசாகக் கொடுத்துள்ளார். அவற்றின் மதிப்பு 200,000 டாலர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்