Skip to main content
21 ஆண்டுப் பயணத்தின் முடிவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

21 ஆண்டுப் பயணத்தின் முடிவு - ஓய்வுபெறுகிறார் மெஸ்ஸி

வாசிப்புநேரம் -
21 ஆண்டுப் பயணத்தின் முடிவு - ஓய்வுபெறுகிறார் மெஸ்ஸி

(கோப்புப் படம்: ROBERTO SCHMIDT / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 01 Sep 2026 09:23AM புதுப்பிப்பு : 01 Sep 2026 01:46PM
காற்பந்து ஜாம்பவான் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) அனைத்துலகக் காற்பந்து ஆட்டங்களிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.

அர்ஜென்ட்டின தேசிய அணியுடன் அவருடைய 21 ஆண்டுப் பயணம் முடிவுக்கு வருகிறது.
Related article image
(படம்: AFP)
தேசிய அணிக்காகத் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டதாக 39 வயது மெஸ்ஸி சொன்னார்.

இளம் வீரர்கள் பொறுப்பேற்கவேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
Related article image
(கோப்புப் படம்: LIU JIN / AFP)
அர்ஜென்ட்டினாவுக்காக அதிகப் போட்டிகளில் விளையாடிய வீரர், அதிகக் கோல் தந்தவர் என்ற பெருமையுடன் விடைபெறுகிறார் மெஸ்ஸி.

அவர் 207 போட்டிகளில் 125 கோல்களைத் தந்துள்ளார்.
Related article image
(கோப்புப் படம்: Pedro UGARTE / AFP)
மெஸ்ஸி தலைமையில் அர்ஜென்ட்டினா 2022 உலகக் கிண்ணத்தையும் இரண்டு Copa America பட்டங்களையும் வென்றது.

Inter Miami அணியுடனான தமது பயணத்தைத் தொடரப்போவதாக மெஸ்ஸி தெரிவித்தார்.
Related article image
(கோப்புப் படம்: GUILLERMO MUÑOZ / AFP)
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்