Skip to main content
லிவர்ப்பூல் எண் 20 சட்டை இனி இல்லை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

லிவர்ப்பூல் எண் 20 சட்டை இனி இல்லை

வாசிப்புநேரம் -
லிவர்ப்பூல் எண் 20 சட்டை இனி இல்லை

Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

லிவர்ப்பூல் காற்பந்து அணி விளையாட்டாளர்களிடையே இனி எண் 20 சட்டை பயன்படுத்தப்படமாட்டாது.

விளையாட்டாளர் டியோகோ ஜோட்டாவை (Diogo Jota) நினைவுகூரும் வகையில் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குழு சொன்னது.

28 வயது ஜோட்டா, கடந்த வாரம் கார் விபத்தில் மாண்டார்.

அவர் பயன்படுத்திய சட்டையின் எண் 20.

ஜோட்டாவின் குடும்பத்தாருடன் கலந்துரையாடிய பிறகு எண்ணை இனி பயன்படுத்தவேண்டாம் என்று தீர்மானித்ததாக லிவர்ப்பூல் சொன்னது.

அத்தகைய கெளரவம் அணியில் இருந்த ஒருவருக்கு முதன்முறையாக  வழங்கப்பட்டுள்ளதாக அது கூறியது.

ஜோட்டாவின் மறைவுக்குப் பின் லிவர்ப்பூல் நாளை (13 ஜூலை) முதல்முறையாக விளையாடவிருக்கிறது.

பிரெஸ்டன் நார்த் என்ட் (Preston North End) அணியுடன் நட்புமுறை ஆட்டம் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும்.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்