சிங்கப்பூரின் லோ கியென் யூவிற்கு ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியில் வெண்கலம்

Ningbo Olympic Sports Center
சிங்கப்பூரின் லோ கியென் யூ (Loh Kean Yew) ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.
அரையிறுதிச் சுற்றில் தாய்லந்தின் குன்லவுட் விட்டிட்சார்னுடன் (Kunlavut Vitidsarn) மோதிய அவர் 21-23, 10-21 எனும் செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார்.
அதனால் லோ போட்டியிலிருந்து வெளியேற நேரிட்டது.
இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் விட்டிட்சார்ன் அடுத்து சீனாவின் லு குவாங்ஸுவுக்கு (Lu Guangzu) எதிராக விளையாடுவார்.