Skip to main content
தாய்லந்து பேட்மிண்டன் போட்டியில் சிங்கப்பூர் தோல்வி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

தாய்லந்து பேட்மிண்டன் போட்டியில் சிங்கப்பூர் தோல்வி

வாசிப்புநேரம் -
தாய்லந்து பொதுவிருது பேட்மிண்டன் விளையாட்டின் அரை இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் விளையாட்டாளர் லோ கியென் யூ (Loh Kean Yew)பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

தாய்லந்து விளையாட்டாளர் குன்லாவுட் விதித்சார்னுடன் (Kunlavut Vitidsarn) அவர் பொருதினார்.

21க்கு 10, 21க்கு 12 எனும் செட் கணக்கில் தாய்லந்து விளையாட்டாளர் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தாய்லந்து தலைநகர் பேங்காக்கில் ஆட்டம் இடம்பெற்றது.

லோ கடந்த 11 நாள்களாக 9 விளையாட்டுகளில் லோ களமிறங்கினார்.

உலகத் தரவரிசையில் தற்போது 11ஆவது இடத்தில் அவர் உள்ளார்.

ஒரு மாதத்துக்கு முன்னர் நடந்த பேட்மிண்டன் ஆசிய விளையாட்டுக் கிண்ண அரையிறுதியிலும் லோ குன்லாவுட்டிடம் தோல்வி கண்டார். அந்த ஆட்டத்தில் அவருக்கு வெண்கலம் கிடைத்தது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்