Skip to main content
சிங்கப்பூர் பேட்மிண்ட்டன் பொது விருதுப் போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

சிங்கப்பூர் பேட்மிண்ட்டன் பொது விருதுப் போட்டி - லோ கியென் யூவிற்குத் தோல்வி

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் பேட்மிண்ட்டன் பொது விருதுப் போட்டியில் சிங்கப்பூர் விளையாட்டாளர் லோ கியென் யூ (Loh Kean Yew) காலிறுதிச் சுற்றைத் தாண்டிச் செல்லவில்லை.

பிரான்சின் கிறிஸ்டோ பொப்போவுடன் (Christo Popov) பொருதிய ஆட்டத்தில் அவர் 21-10, 21-14 என்ற செட் விவரத்தில் தோல்வியைச் சந்தித்தார்.

உலகத் தரவரிசையில் 23ஆம் நிலையில் உள்ள பொப்போவ் அடுத்த சுற்றில் சீனாவின் லூ குவாங்சுவை (Lu Guangzu) சந்திப்பார்.

லோவுடன் பொருதிய 6 ஆட்டங்களில் பொப்போவ் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார். 2023 பொதுவிருதுப் போட்டியிலும், காலிறுதிச் சுற்றில் அவர் லோவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி கண்டார்.

போட்டியில் இருந்த கடைசி சிங்கப்பூரர் லோ. அவருக்கு முன்பாக, இயோ ஜியா மின் (Yeo Jia Min), காலிறுதிச் சுற்றில் வெளியேறினார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்