Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பேட்மிண்டன் World Tour Finals போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் சிங்கப்பூர் ஆடவர் - லோ கியென் இயூ

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் பேட்மிண்டன் வீரர் லோ கியென் இயூ World Tour Finals போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

அந்த மதிப்புமிக்க போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் சிங்கப்பூர் ஆடவர் என்ற பெருமை அவரைச் சேரும்.

அந்தப் போட்டி அடுத்த மாதம் (டிசம்பர் 2022) 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியப் பொதுவிருதுப் போட்டியின் தொடக்கச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் லோ பிட் செங்கை (Low Pit Seng) வீழ்த்தியதைத் தொடர்ந்து, அந்தப் போட்டிக்கு லோ தகுதி பெற்றார்.

World Tour Finals போட்டியில் தற்போது உலகத் தரவரிசையில் முதல் 8 நிலைகளில் உள்ள விளையாட்டாளர்கள் பங்கேற்பர்.

லோ உலகத் தரவரிசையில் 3ஆம் இடத்தில் உள்ளார்.

அந்தப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையைச் சென்ற ஆண்டு பெற்றார் பேட்மிண்டன் வீராங்கனை இயோ ஜியாமின் (Yeo Jiamin). 

ஆதாரம் : CNA/sn

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்