Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி - அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெறும்

வாசிப்புநேரம் -
2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி - அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெறும்

(படம்: Yuki IWAMURA / AFP)

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி 2026ஆம் ஆண்டில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்பந்து ஆட்டங்கள் 16 நகரங்களில் நடைபெறும் என அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (FIFA) கூறியது.

அமெரிக்கா: 11 நகரங்கள்
மெக்சிகோ: 3 நகரங்கள்
கனடா: 2 நகரங்கள்

ஆனால் தொடக்க ஆட்டமும் இறுதி ஆட்டமும் எங்கு நடைபெறும் என்ற தகவல் அளிக்கப்படவில்லை.

2026ஆம் ஆண்டுக்குள் காற்பந்து அந்தப் பகுதியின் ஆகப் பெரிய விளையாட்டாக உருவெடுத்திருக்கும் என்று FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino) தெரிவித்தார்.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி அமெரிக்காவில் கடைசியாக 1994ஆம் ஆண்டிலும் மெக்சிகோவில் 1986ஆம் ஆண்டிலும் நடைபெற்றன.

கனடா முதல்முறையாகப் போட்டிகளை ஏற்று நடத்தவுள்ளது.

இறுதி ஆட்டம் எங்கு நடைபெறும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என இன்ஃபான்டினோ குறிப்பிட்டார்.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்