விளையாட்டாளர் உதட்டில் முத்தம் - ஸ்பெயின் காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் பதவி விலகல்
வாசிப்புநேரம் -

கோப்புப் படம்: REUTERS/Juan Medina
ஸ்பெயினின் காற்பந்துச் சம்மேளனத் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் (Luis Rubiales) பதவி விலகுகிறார்.
அவர் ஸ்பெயினின் காற்பந்து விளையாட்டாளர் ஜென்னி ஹெர்மோசோவின் (Jenni Hermoso) உதட்டில் வலுக்கட்டாயமாக முத்தமிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்ற மாதம் ஸ்பெயின் மகளிர் உலகக் காற்பந்துப் போட்டியில் வெற்றிபெற்றது.
விளையாட்டாளர்களுக்குப் பதக்கங்களை வழங்கியபோது 46 வயது ரூபியேல்ஸ், ஹெர்மோசோவிடம் அவ்வாறு நடந்துகொண்டார்.
அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (FIFA) ரூபியேல்ஸைத் தற்காலிகமாக 90 நாள்களுக்குப் பணி நீக்கம் செய்தது.
ஸ்பெயினின் அரசாங்க வழக்கறிஞர்கள் அவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கைத் தொடுத்துள்ளனர்.
33 வயது ஹெர்மோசோவும் அதிகாரபூர்வமாக அவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருக்கிறார்.
அந்த முத்தம் இருவரின் சம்மதத்துடன் நடந்தது என்று ரூபியேல்ஸ் தொடர்ந்து கூறுகிறார்.
தமது வேலையைத் தொடர முடியாததால் பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டார்.
-AFP

ஆதாரம் : AFP