Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இரு விளையாட்டாளர்களுக்கு வெளிநாட்டில் போட்டியிட மலேசிய பேட்மின்ட்டன் சங்கம் தடை - குறைகூறும் டென்மார்க் வீரர்கள்

வாசிப்புநேரம் -

மலேசிய பேட்மின்ட்டன் சங்கம் அதன் தேசிய பேட்மின்ட்டன் விளையாட்டாளர்களில் இருவருக்கு வெளிநாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதிலிருந்து ஈராண்டுக்குத் தடை விதித்ததை டென்மார்க்கின் முன்னணி வீரர்கள் இருவர் விமர்சித்துள்ளனர்.  

அனைத்து இங்கிலாந்து வெற்றியாளர் லீ ஸீ ஜியாவும் (Lee Zii Jia), 2018ஆம் ஆண்டு உலக இளையர் பேட்மின்ட்டன் வீரர் கோ ஜின் வெயும் (Goh Jin Wei) மலேசிய பேட்மின்ட்டன் சங்கத்தால் ஈராண்டுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளனர். 

உலக பேட்மின்ட்டன் விளையாட்டாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள விக்டர் எக்செல்சன் (Viktor Axelsen), 22 வது இடத்தில் உள்ள சோல்பர்க் விட்டிங்கஸ் (Solberg Vittinghus) இருவரும் அது குறித்து விமர்சித்தனர்.   

எக்செல்சன் டுவிட்டரில் அவர்கள் மீதான தடை விசித்திரமானது என்று கூறியுள்ளார். 

இருவரும் எந்தவொரு குற்றமும் செய்யவில்லை என்றும் நாட்டையோ விளையாட்டையோ அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளவில்லை என்றும் விட்டிங்கஸ், தனது Facebook பக்கத்தில் குறிப்பிட்டார். 

தடைசெய்யப்பட்ட இருவரும்  தடை செய்யப்படுவதற்கு முன் மலேசிய தேசிய பேட்மின்ட்டன் குழுவிலிருந்து விலகித் தனிப்பட்ட ஒரு பேட்மின்ட்டன் சங்கத்தில் சேர்ந்தனர். அதன் காரணமாய் அவர்கள் தடைசெய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்