Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆண்டின் தலைசிறந்த காற்பந்து வீரர் யார்?

வாசிப்புநேரம் -
ஆண்டின் தலைசிறந்த காற்பந்து வீரர் யார்?

(கோப்புப் படம்: REUTERS/Molly Darlington)

ஆண்டின் தலைசிறந்த காற்பந்து வீரராக மென்செஸ்ட்டர் சிட்டியின் பில் ஃபோடனை (Phil Foden) நிபுணத்துவக் காற்பந்து விளையாட்டாளர் சங்கம் தேர்ந்தெடுத்திருக்கிறது.

24 வயது ஃபோடன் 53 ஆட்டங்களில் மொத்தம் 27 கோல்களை அடித்தார்.

அவருக்குப் போட்டியாக சிட்டியின் ஹாலண்ட் (Haaland), ரோட்ரி (Rodri), செல்சியின் பாமர் (Palmer), ஆர்சனலின் மார்ட்டின் ஒடெகார்ட் (Martin Odegaard) போன்றோர் விளங்கினர்.

ஆண்டின் தலைசிறந்த இளம் ஆட்டக்காரராக செல்சியின்
22 வயது பாமர் (Palmer) வெற்றிபெற்றார்.

சிறந்த பெண் விளையாட்டாளராக மென்செஸ்ட்டர் சிட்டியின் கத்திஜா ஷா (Khadija Shaw) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இளம் பெண் விளையாட்டாளர் விருதை மென்செஸ்ட்டர் யுனைடெட் அணியின் கிரேஸ் கிளிண்டன் (Grace Clinton) வென்றார்.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்